சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வாஸ்து கை கொடுக்குமா?

Added : நவ 16, 2021
Share
Advertisement
வாஸ்து கை கொடுக்குமா?'பாவம்; அவர் ரொம்பவே நொந்து போயுள்ளார். இனியாவது அவரது வாழ்வில் வசந்தம் வீசினால் சரி' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரேயை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது கட்சியினர்.ஆவேசமாக பேசக் கூடியவர், இளைஞர்களை கவரக் கூடியவர் என, ராஜ் தாக்கரேக்கு பல பெருமைகள் உண்டு. சிவசேனா நிறுவனரான, மறைந்த பால் தாக்கரேயின் உறவினர் இவர்.

அக்கம் பக்கம்


வாஸ்து கை கொடுக்குமா?



'பாவம்; அவர் ரொம்பவே நொந்து போயுள்ளார். இனியாவது அவரது வாழ்வில் வசந்தம் வீசினால் சரி' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரேயை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது கட்சியினர்.ஆவேசமாக பேசக் கூடியவர், இளைஞர்களை கவரக் கூடியவர் என, ராஜ் தாக்கரேக்கு பல பெருமைகள் உண்டு. சிவசேனா நிறுவனரான, மறைந்த பால் தாக்கரேயின் உறவினர் இவர். பால் தாக்கரே, தன் அரசியல் வாரிசாக ராஜ் தாக்கரேயைத் தான் அறிவிப்பார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், தன் மகன் உத்தவ் தாக்கரேயை அரசியல் வாரிசாக வலுக்கட்டாயமாக திணித்தார்;

இதனால் விரக்தி அடைந்த ராஜ் தாக்கரே தனிக் கட்சி துவக்கினார். துவக்கத்தில் இவரது கட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில் நவநிர்மாண் சேனா கட்சி, 13 இடங்களில் வெற்றி பெற்றது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது.

இதனால் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்த ராஜ் தாக்கரே, சமீபத்தில் வாஸ்து நிபுணர் ஒருவரைச் சந்தித்து பேசினார். அவர் தெரிவித்த ஆலோசனைப்படி, தன் வீட்டை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா பகுதிக்கு மாற்றியுள்ளார். 'வாஸ்து நிபுணரின் ஆலோசனைப்படி வீட்டை மாற்றியுள்ள ராஜ் தாக்கரேவுக்கு இனியாவது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X