கூட்டுறவு பால் சொசைட்டி: எம்.பி., திறந்து வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு பால் சொசைட்டி: எம்.பி., திறந்து வைப்பு

Added : நவ 16, 2021
Share
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, புதிய கூட்டுறவு பால் சொசைட்டி திறப்பு விழா நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றியம் சாலையூர் கிராமத்தில் புதிய பால் சொசைட்டி திறப்பு விழா நடந்தது. அதை திறந்து வைத்து எம்.பி., ராஜேஷ்குமார் பேசியதாவது: கடந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூன்று மாதங்களில் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, புதிய கூட்டுறவு பால் சொசைட்டி திறப்பு விழா நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றியம் சாலையூர் கிராமத்தில் புதிய பால் சொசைட்டி திறப்பு விழா நடந்தது. அதை திறந்து வைத்து எம்.பி., ராஜேஷ்குமார் பேசியதாவது: கடந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூன்று மாதங்களில் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. விரைவில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஏழு கோடி ரூபாய் செலவில் நிர்வாக கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலைமைச்சரின் ஒப்புதலோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு, 68 கோடி ரூபாயில் பால் பண்ணை தேசிய பால்வள வாரியத்தின் மானியத்தோடு அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X