சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உத்தரகண்டின் கேதார்நாத் கோவிலில் நடந்த மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதை, தமிழகத்திலுள்ள ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் ஒளிபரப்பிய, பா.ஜ.,வினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை


'டவுட்' தனபாலு

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உத்தரகண்டின் கேதார்நாத் கோவிலில் நடந்த மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதை, தமிழகத்திலுள்ள ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் ஒளிபரப்பிய, பா.ஜ.,வினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது?

'டவுட்' தனபாலு: கோவில் தொடர்பான நிகழ்ச்சியை, கோவில்களில் ஒளிபரப்பியது குற்றமா... அறநிலையத்துறை, கோவில்களை பராமரிக்கவும், புனரமைக்கவும் தானே தவிர, கோவில் நிகழ்ச்சிகள், வழிபாடுகளை கட்டுப்படுத்த என நினைத்து விட்டீர்களா... சமீப காலமாக உங்கள் மீது கூறப்படும், 'பா.ஜ.,வின் 'பி' டீம்' என்ற குற்றச்சாட்டை பொய்யாக்க, இதுபோன்று அறிக்கை அளிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக, பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற, காலநிலை மாற்ற மாநாட்டில், உறுதியான செயல்திட்டங்கள் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலகம், பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை, வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணர வேண்டும்.

'டவுட்' தனபாலு: சுற்றுச்சூழல், பசுமை வாயு, புவி வெப்பமயமாதல் போன்ற விவகாரங்கள் முக்கியமானவை தான். நீங்கள் இப்படி அறிக்கை அளிப்பதால், இந்த பிரச்னைகள் சரியாகி விடப் போகின்றனவா அல்லது நம்மால் தான் அவற்றை சரிப்படுத்த முடியுமா... எனவே, உங்களின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் தலைவரான உங்களுக்கு தேவை இல்லாதது தானோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன்:
அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டித்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே, பா.ஜ.,வின் வாலாகவே மாற்றப்பட்டுள்ள இந்த அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையை, இது மேலும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

'டவுட்' தனபாலு: தமிழக அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயது கடந்த ஆண்டு, ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அதுபோல, அரசின் தேவைக்கு ஏற்ப, இதுபோன்ற முடிவுகள், எல்லா அரசுகளிலும் எடுக்கப்படுவது வழக்கம் தான். எனவே, இதனால் நம்பகத்தன்மை பறிபோய் விடும் என கதறுவது, அரசியல் நோக்கத்திற்காகத் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-நவ-202119:53:37 IST Report Abuse
D.Ambujavalli புதிதாக அதிகாரிகள் வந்துவிட்டால் மட்டும் ஆளும் அரசுக்கு எதிராகவா செயலாற்றுவார்கள் ? மத்திய, மாநில அரசுகள் எதிர்க்கட்சிக்கு அவ்வப்போது கொஞ்சம் பயம் காட்ட மட்டுமே இத்துறையை பயன்படுத்துகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X