பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம்: 80 பேருக்கு பட்டா வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என, மொத்தம், 216 மனுக்கள் வரப்பெற்றன. பள்ளிபாளையத்தை சேர்ந்த எல்லைப்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என, மொத்தம், 216 மனுக்கள் வரப்பெற்றன. பள்ளிபாளையத்தை சேர்ந்த எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற எல்லை காவலர் அண்ணாமலைக்கு, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், கோனூர் கிராமத்தை சேர்ந்த, மூன்று பேர், செல்லப்பம்பட்டியை சேர்ந்த, 21 பேர், களங்காணியை சேர்ந்த, 56 பேர் என, மொத்தம், 80 பயனாளிகளுக்கு, 42.50 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (பொ)ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X