மோகனூரில் கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூரில் கனமழை

Added : நவ 16, 2021
Share
மோகனூர்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று பகலில் வெயிலில் வாட்டி வதைத்தது. இரவு, 8:00 மணிக்கு மோகனூர் பகுதியில், மழை பெய்யத்துவங்கியது. கனமழையாக பெய்த மழை, ஒரு மணி நேரம் நீடித்தது. ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில், ரயில்வே மேம்பாலம் கீழ், மழைநீர் தேங்கி நின்றது. அதனால், வாகன ஓட்டிகள், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒவ்வொரு மழையின் போது, ரயில்வே பாலத்தின் கீழ்

மோகனூர்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று பகலில் வெயிலில் வாட்டி வதைத்தது. இரவு, 8:00 மணிக்கு மோகனூர் பகுதியில், மழை பெய்யத்துவங்கியது. கனமழையாக பெய்த மழை, ஒரு மணி நேரம் நீடித்தது. ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில், ரயில்வே மேம்பாலம் கீழ், மழைநீர் தேங்கி நின்றது. அதனால், வாகன ஓட்டிகள், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒவ்வொரு மழையின் போது, ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்பதும், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதும் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X