மாற்றுத்திறனாளிகளுக்கான முன் மதிப்பீடு சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான முன் மதிப்பீடு சிறப்பு முகாம்

Added : நவ 16, 2021
Share
திருச்செங்கோடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையம் சார்பில், ஆறு முதல், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, முன் மதிப்பீட்டு முகாம் திருச்செங்கோட்டில் நடந்தது. மேற்பார்வையாளர் (பொ) சந்திரசேகர் தலைமை வகித்தார். முகாமில், மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர், காது கேளாதோர், உடல் இயக்க குறைபாடு உள்ளவர்கள் என, 54 மாணவர்கள் கலந்து கொண்டனர். 'இது போன்ற முன்

திருச்செங்கோடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையம் சார்பில், ஆறு முதல், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, முன் மதிப்பீட்டு முகாம் திருச்செங்கோட்டில் நடந்தது. மேற்பார்வையாளர் (பொ) சந்திரசேகர் தலைமை வகித்தார். முகாமில், மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர், காது கேளாதோர், உடல் இயக்க குறைபாடு உள்ளவர்கள் என, 54 மாணவர்கள் கலந்து கொண்டனர். 'இது போன்ற முன் மதிப்பீட்டு முகாம், விட்டம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலும் நடக்க உள்ளது' என, வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.

* எலச்சிபாளையத்தில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு முன் மதிப்பீட்டு முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X