பரமத்தி அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

Added : நவ 16, 2021
Advertisement
ப.வேலூர்: பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில், 32 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவ மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1982 - 89 வரை ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த, 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ,மாணவியர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40க்கும்

ப.வேலூர்: பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில், 32 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவ மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1982 - 89 வரை ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த, 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ,மாணவியர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அப்பள்ளியில், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், சக நண்பர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பள்ளி நூலகத்திற்கு, 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை உதவி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஜேம்ஸ் விஜயகுமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X