சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அறிக்கை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய கல்லுாரிகள் எதுவும் கட்டக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஹிந்து முன்னணி வரவேற்கிறது. தான்தோன்றித்தனமாக ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.கோவில்களை புனரமைக்க வேண்டும்

பேச்சு, பேட்டி, அறிக்கை

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அறிக்கை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய கல்லுாரிகள் எதுவும் கட்டக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஹிந்து முன்னணி வரவேற்கிறது. தான்தோன்றித்தனமாக ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.கோவில்களை புனரமைக்க வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை, அதை விட்டு, வேறு வேலைகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழகம் முழுதும் நீர் ஆதாரங்களை பெருக்குவதே அரசின் தலையாய நோக்கம் -என்கிறார், முதல்வர் ஸ்டாலின். ஆதாரங்களை பெருக்குகிறோம் என்ற பெயரில், ஆதாயங்களை பெருக்கி கொள்வதால், தலையாய நோக்கம், கானல் நீர் ஆகிப்போகிறது என்பதே உண்மை.நீங்கள் சொல்வதும் உண்மையே. மழை நீர் செல்ல வடிநீர் கால்வாய்கள் கட்டப்பட்டன; அதற்காக இத்தனை ஆண்டுகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அது எல்லாம் வீண் தான்!


தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர் நடிகை காயத்ரிரகுராம் அறிக்கை:
பழங்குடியின மக்களுக்காக பாடுபட்டதாக கூறும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜெய்பீம் படம் வெளி வரும் முன், இத்தனை ஆண்டுகளாக, போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வதி அம்மாவின் குடும்பத்திற்கு எதுவும் செய்தததில்லை.கேட்டால், பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் என்பார். அவர் பாடுபடும் லட்சணம் நன்கு தெரிந்தது தானே...


தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:
கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் எடுக்காததால் ஏற்பட்ட பேரழிவை மூடி மறைக்கவே, 100 கோடி தடுப்பூசி போட்டதை, கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார்.நீங்க ரொம்ப 'லேட்' சார்... 100 கோடி தடுப்பூசி சாதனை நடைபெற்று, ஒரு மாதத்திற்கும் மேலாகிறது... இப்போது போய் அதை கண்டித்து அறிக்கை விடுகிறீர்களே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை: கொரோனா காலத்தில் இணையதள வசதி இல்லாதது, மொபைல் போன் இல்லாதது போன்ற பல காரணங்களால் ஏராளமான மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேறி விட்டனர்.ஏழைகளுக்காக பாடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளதே... அதிலிருந்து அந்த மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்து மீண்டும் படிக்க வைக்கலாமே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X