செய்தி செய்தி

தமிழ்நாடு

உளவியல் ஆலோசனை குழு முடக்கம் பள்ளிகளில் மீண்டும் செயல்படுமா?

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண கடந்த, 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வி மாவட்டங்களை இணைத்து, 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிதோறும்

உடுமலை: நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண கடந்த, 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வி மாவட்டங்களை இணைத்து, 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்னைகள் பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என, உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன.ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். உளவியல் நிபுணர் தலைமையிலான குழு, பள்ளிகள் தோறும் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
கொரோனாவுக்கு பின் இதன் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''கொரோனாவுக்கு பின் நடமாடும் உளவியல் ஆலோசனை குழு முடங்கி விட்டது. பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக, தேசிய மகளிர் ஆணையம், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து, பள்ளி, கல்லுாரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியான ஆலோசனை குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X