தடுப்பூசியால் வேலையிழப்பு மத்திய அரசுக்கு கோர்ட் கேள்வி

Updated : நவ 18, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:'தடுப்பூசியால் வேலையிழப்புக்கு ஆளான ஒருவரின் குறையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை அல்லவா?' என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ஒரு 'வெல்டிங்' தொழிலாளி, இந்தியாவிற்கு வந்த போது கொரோனா பிரச்னையால் மீண்டும் பணிக்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டார்.இதையடுத்து அவர் கேரள உயர்
 தடுப்பூசி, வேலையிழப்பு ,அரசு, கேள்வி

புதுடில்லி:'தடுப்பூசியால் வேலையிழப்புக்கு ஆளான ஒருவரின் குறையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை அல்லவா?' என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ஒரு 'வெல்டிங்' தொழிலாளி, இந்தியாவிற்கு வந்த போது கொரோனா பிரச்னையால் மீண்டும் பணிக்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டார்.இதையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நான் 'கோவாக்சின்' தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்திக் கொண்டேன். ஆனால் சவுதி அரேபியா, கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்காததால், நான் மீண்டும் அங்கு சென்று பணியை தொடர முடியாமல் தவிக்கிறேன். அதேசமயம் சவுதி அரேபியா, 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தியோர் வருவதற்கு அனுமதிக்கிறது.

அதனால் கோவிஷீல்டு தடுப்பூசியை மூன்றாவது 'டோஸ்' ஆக நான் போட்டுக் கொள்ள அனுமதிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த அமர்வு மத்திய அரசை குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் தடுப்பூசியால் வேலைஇழப்பிற்கோ அல்லது வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கோ ஆளான ஒருவரின் குறையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை அல்லவா? உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த கோவாக்சின் தடுப்பூசியை ஏன் சவுதி அரேபியா ஏற்காமல் உள்ளது.

இது தொடர்பான விபரங்களை உதவி சொலிசிட்டர் ஜெனரல் அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு, வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-நவ-202117:17:59 IST Report Abuse
sankaseshan சேட்டன்களுக்கு வித ண்டா வாதம் செய்வது எ ன்றால் வெல்லக்கட்டி தெரிந்தும் ஏன். இந்திய வந்தாய் கேரளா கோர்ட்டு புத்தி. சொல்ல வந்துட்டாங்க
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
17-நவ-202115:32:09 IST Report Abuse
raja அவன் ஏற்கவில்லைன்னா ஏற்றுக்கொண்ட தடுப்பூசியை போட்டுக்கவேண்டியது தானே ...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
17-நவ-202114:49:10 IST Report Abuse
a natanasabapathy நீதிபதி சவூதி அரேபியா அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி ஊசி போடாதவர்களையும் வேலைக்கு அனுமதிக்க சொல்லவேண்டும் . தீர்ப்பை கேட்டு சிரிப்பு தான் வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X