செய்தி செய்தி

தமிழ்நாடு

புத்தகம் வாசிப்பதை பழக்கமாக்கணும்! நூலக வாசகர்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: அறிவியல் வளர்ச்சி போன்ற காரணங்களால், நுாலகம் சென்று படிப்பது, அரிதாகி வருகிறது. புத்தகம் வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை, முதல் கிளை நுாலகம், 1954ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நுாலகம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, உடுமலை, மடத்துக்குளம் வட்ட நுாலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த நுாலகத்தில், 1.15 லட்சம்



உடுமலை: அறிவியல் வளர்ச்சி போன்ற காரணங்களால், நுாலகம் சென்று படிப்பது, அரிதாகி வருகிறது. புத்தகம் வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை, முதல் கிளை நுாலகம், 1954ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நுாலகம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, உடுமலை, மடத்துக்குளம் வட்ட நுாலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த நுாலகத்தில், 1.15 லட்சம் நுால்கள் உள்ளன.இதேபோல், குடிமைப்பணி மற்றும் போட்டித்தேர்வுகளுக்காக மட்டும் 25 ஆயிரம் நுால்கள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக, 17,400 உறுப்பினர்கள்; 218 புரவலர்கள்; தினமும், 300 வாசகர்கள் வருகை என, முன்னோடி நுாலகமாக திகழ்ந்து வருகிறது.குறிப்பாக, தமிழகத்திலேயே முதன் முறையாக, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., என, போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தி, இதுவரை, 14 பேர், அரசுப் பணியிலும் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு, பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்த நுாலகம், நவீன வசதிளை உள்ளடக்கி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டது. 'டிஜிட்டல்' நுாலகமாக பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.வாசகர்கள் கூறியதாவது:இந்த நுாலகத்தை, மாணவ, மாணவியர் மட்டுமில்லாது, தகவல் தேடும் பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மாணவர்கள், தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது.அறிவியல் வளர்ச்சி போன்ற காரணங்களால், நுாலகம் சென்று படிப்பது, அரிதாகி வருகிறது. புத்தகம் வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நுாலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நுாலகம், மாணவ, மாணவியருக்கு ஒழுக்கத்தை ஊட்டுவதுடன் பகுத்தறிவுத் திறனை வளர்க்கவும், நற்பண்புகள் மற்றம் நாகரிகத்தை கற்றுத் தரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X