'கோவிலில் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கோர்ட் தலையிடாது'

Updated : நவ 18, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (8)
Advertisement
புதுடில்லி:திருமலை ஏழுமலையான் கோவில் வழிபாட்டில் முறைகேடு நடப்பதாக கூறிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, 'கோவிலில் தேங்காய் உடைப்பது, ஆரத்தி காட்டுவதில் எல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறியது.ஆந்திராவில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.அவற்றில் அபிஷேகம் சேவை
கோவில், தேங்காய், கோர்ட்

புதுடில்லி:திருமலை ஏழுமலையான் கோவில் வழிபாட்டில் முறைகேடு நடப்பதாக கூறிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, 'கோவிலில் தேங்காய் உடைப்பது, ஆரத்தி காட்டுவதில் எல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறியது.

ஆந்திராவில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.அவற்றில் அபிஷேகம் சேவை உள்ளிட்ட சில வழிபாடுகள் ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக ஸ்ரீவாரி தாதா என்ற பக்தர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவில், 'சடங்குகள், வழிபாடுகளை நடத்துவது தேவஸ்தானத்தின் உரிமை. மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காதபோது நீதிமன்றம் அதில் தலையிட முடியாது' என கூறி, அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அடுத்ததாக அவர் உச்ச நீதிமன்றத்தில் 'அப்பீல்' மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே மனு விசாரணைக்கு வந்தபோது, தேவஸ்தானம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கலானது.அதில், 'கோவிலின் சேவைகள் மற்றும் உற்சவங்கள் புனித ராமானுஜாச்சாரியாரால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 'சடங்குகள் மிக நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சமய ஊழியர்கள் மற்றும் கோவில் பூஜாரிகளால் ஆகம விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது' என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:கோவிலில் பக்தர்களிடையே பாரபட்சம் காட்டுவது அல்லது நிர்வாக ரீதியிலான பிரச்னை போன்றவற்றில் வேண்டுமானால் நீதிமன்றம் தலையிடலாம்.மாறாக தினசரி வழிபாடுகள், அவற்றை நடத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் நீதிமன்றம் தலையிடக் கூடாது.
கடவுள் முன் தேங்காய் உடைப்பது எப்படி, ஆரத்தி நடத்துவது எப்படி என்பவை எல்லாம் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகள். இவை நீதிமன்றம் தலையிடக்கூடிய பிரச்னைகள் அல்ல. நிர்வாக பிரச்னைகள் தொடர்பாக மனுதாரருக்கு விளக்கம் தேவைப்பட்டால், எட்டு வாரங்களுக்குள் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
17-நவ-202117:21:55 IST Report Abuse
DVRR TTD தலைவர் யார் தெரியுமா கிறித்துவ ஜெகன் மோகன் ரெட்டி யின் கிறித்துவ மாமா அதனால் தான் இந்த வழக்கு. நடைமுறையை மாற்றியது இப்போது வந்த தலைவர் என்பதால் இந்த வழக்கு தேங்காய் உடைக்க பிரசாதம் வழங்க இப்போ நடைமுறை திடீர் என்று கிறித்துவ முறையில் ஞானப்பிரசாதம் சர்ச்சில் வழங்குவது போல வழங்குகிறார்களாம் என்று சொல்லி வழக்கு இதை சரியாக கூற முடியாததினால் மற்றும் கிறித்துவ முதல்வரின் கிறித்துவ மாமாவிற்கு எதிராக சொல்லமுடியாது என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு இவ்வாறு உள்ளது
Rate this:
Cancel
17-நவ-202117:09:12 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0...
Rate this:
Cancel
17-நவ-202115:34:20 IST Report Abuse
அப்புசாமி பக்தர்களிடையே பாரபட்சம் பல வருஷமா நடந்துக்குட்டேதான் இருக்கு யுவர் ஆனர். அரசியல்வாதிகள், கெவுனர், ராஜபக்ஷே இவிங்கள்ளாம் வந்தா உடனே மக்களை முடக்குட்டு இவிங்களுக்கு ஒருமணி நேரம் தொறந்து வெப்பாங்க. 10 ஆயிரம் ரூவா டிக்கெட் வாங்குனா, ஸுவாமியே நேரா வந்து காட்சி குடுப்பாரு. இதெல்லாம் நீங்க தலையிட்டு தீர்க்க முடியாது யுவர் ஆனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X