பொது செய்தி

தமிழ்நாடு

நார் தொழிற்சாலைகளுக்கு 15 நிபந்தனைகள்: விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
நெகமம்: தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை வகையில் இருந்து, ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி, விவசாய நிலங்களை பாதுகாத்த தமிழக அரசுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதியில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. நார் உற்பத்தியில், 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு

நெகமம்: தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை வகையில் இருந்து, ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி, விவசாய நிலங்களை பாதுகாத்த தமிழக அரசுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதியில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. நார் உற்பத்தியில், 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.நார் உற்பத்தியில் உள்ள உவர்ப்பு தன்மை நீக்குவதற்காக, தண்ணீர் விட்டு கழுவப்படுகிறது. இதற்கு அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. வெளியேற்றப்படும் நீரானது, ஆங்காங்கே தேக்கப்படுகிறது. இதனால், மண்ணின் தரம், தன்மை பாதிக்கிறது.நிலத்தடி நீர் பாதித்து, கிணற்று நீர் நிறமாற்றம் அடைகிறது. இதை குடிக்கும் கால்நடைகள், மனிதர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். காற்றில் நார் துகள்கள் பறப்பதால், ரோட்டில் வாகனத்தில் செல்வோர் விபத்து உள்ளாகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு, டில்லி பசுமை தீர்ப்பாயத்தில், திம்மங்குத்து பகுதியை சேர்ந்த டாக்டர் நாகராஜ் புகார் மனு தாக்கல் செய்தார். இவருக்கு உதவியாக, நார் உற்பத்தியில் பி.ஏ.பி., நீர் அதிகளவு பயன்படுத்தப்படுவதை ஆதாரத்துடன், பாசன சங்க தலைவர் பரசிவம் மனு தாக்கல் செய்தார்.இம்மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் திம்மங்குத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நார் உற்பத்தியால், மண், நிலத்தடி நீர் மாசுபடுவதை உறுதி செய்து, பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் உற்பத்தி, ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. நார் உற்பத்தி தொழிற்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய, 15 நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.நீர், காற்று மாசு படுவதை தடுத்து, விளை நிலம் மற்றும் விவசாயத்தை காப்பாற்றிய இந்த உத்தரவை, மாசுகட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதல்படி, அமல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சருக்கும், முதல்வருக்கும் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X