சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் திருநங்கைகள் உணவுத்திருவிழா

Added : நவ 16, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திருநங்கைகள் உணவுத்திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி லயன்ஸ் கிளப், பொள்ளாச்சி திருநங்கைகள் சங்கம் சார்பில், உணவுத்திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி, லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. லயன்ஸ் கிளப் பிராந்திய தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.இதில், 50க்கும் மேற்பட்ட நவீன ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சமையல் கலைஞர்களான, 11

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திருநங்கைகள் உணவுத்திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி லயன்ஸ் கிளப், பொள்ளாச்சி திருநங்கைகள் சங்கம் சார்பில், உணவுத்திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி, லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. லயன்ஸ் கிளப் பிராந்திய தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.இதில், 50க்கும் மேற்பட்ட நவீன ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சமையல் கலைஞர்களான, 11 திருநங்கைகள், வித, விதமான சைவ, அசைவ உணவுகள் தயாரித்து, பார்வைக்கு வைத்தனர்.திருநங்கைகள் கல்கி சுப்ரமணியம், மீராபாலன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி, திருநங்கைகள் சட்ட ஆலோசகர் தங்கரத்தினம், லயன்ஸ் தலைவர் நாகமாணிக்கம், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
திருநங்கை கல்கி சுப்ரமணியம் கூறுகையில், ''திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், இந்த உணவுத்திருவிழா மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கிறது. திருநங்கைகள், திறமையை வெளிக்கொண்டு வர அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முயற்சிகள் எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X