5,000 பிரசவம் பார்த்த நர்ஸ் குழந்தை பெற்ற பின் உயிரிழப்பு| Dinamalar

5,000 பிரசவம் பார்த்த நர்ஸ் குழந்தை பெற்ற பின் உயிரிழப்பு

Updated : நவ 17, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (4)
Share
அவுரங்காபாத்:மஹாராஷ்டிராவில், பிரசவத்தின் போது 5,000க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மருத்துவ உதவி அளித்த நர்ஸ், தன் பிரசவத்தின் போது உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.மஹாராஷ்டிராவின் ஹின்கோலி மாவட்ட அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ஜோதி காவ்லி, 38. கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார்.கர்ப்பமாக இருந்த ஜோதி,
Pregnancy, Nurse, Died, பிரசவம், நர்ஸ், உயிரிழப்பு

அவுரங்காபாத்:மஹாராஷ்டிராவில், பிரசவத்தின் போது 5,000க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மருத்துவ உதவி அளித்த நர்ஸ், தன் பிரசவத்தின் போது உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் ஹின்கோலி மாவட்ட அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ஜோதி காவ்லி, 38. கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார்.
கர்ப்பமாக இருந்த ஜோதி, கடந்த 1ம் தேதி வரை பணிக்கு வந்தார். கடந்த 2ம் தேதி பிரசவ வலி எடுத்ததை அடுத்து, தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவித்த பின், ஜோதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு நிமோனியா பாதிப்பு உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, நான்டெட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு நிலைமை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜோதி காவ்லி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் 5,000க்கும் மேற்பட்ட பிரசவத்தில், தாய்மார்களுக்கு மருத்துவ உதவி அளித்த ஜோதி காவ்லியின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X