பொது செய்தி

இந்தியா

பள்ளி மாணவியருக்குபாதுகாப்பு பயிற்சி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெங்களூரு:போலீஸ் துறையின் மூலம், கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.உள்துறை அமைச்சத்தின் சார்பில், 'பாதுகாப்பான நகரம்' என்ற நிகழ்ச்சியின் ஒரு தொகுப்பாக, பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை செயல்படுத்த, 240 ஏட்டுகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பெங்களூரு:போலீஸ் துறையின் மூலம், கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.உள்துறை அமைச்சத்தின் சார்பில், 'பாதுகாப்பான நகரம்' என்ற நிகழ்ச்சியின் ஒரு தொகுப்பாக, பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை செயல்படுத்த, 240 ஏட்டுகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தற்காப்பு முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள், பெண்களுக்கான பாதுகாப்பு, சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கு மாநில அளவில் ஒவ்வொரு பள்ளி மற்றும் பி.யு., கல்லுாரிகளிலிருந்து தலா மூன்று மாணவர்கள் வீதம், 720 மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.பயிற்சி பெற்ற ஏட்டுகள், தேர்வு செய்யப்பட்ட மாணவியருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள், பள்ளியிலுள்ள மற்ற மாணவியருக்கு கற்று கொடுக்க வேண்டும்.

பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்ட ஏட்டுகள், மாணவியர் மற்றும் போலீசாருக்கான இணைப்பாகவும் செயல்பட உள்ளனர்.மாணவியர் சந்திக்கும் சமூக பிரச்னைகள் மற்றும் போலீசாரின் உதவி தேவைப்படும் பட்சத்தில், நியமிக்கப்பட்ட ஏட்டுகளை அணுகுவதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது.ஏட்டுகளுக்கு இரண்டு மாதம் தொடர்ந்து 5 மணி நேரம் பயிற்சி அளிப்பதற்கு போலீஸ் துறை முடிவு செய்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X