'டயாலிசிஸ்' மையங்கள் மூடப்படும் அபாயம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
உத்தர கன்னடா:சரியான பராமரிப்பு இல்லாததால், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள, 'டயாலிசிஸ்' மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் 122 மருத்துவமனையில் டயாலிசிஸ் மையங்கள் உள்ளன. இதை பராரிக்கும் பொறுப்பு, 'பி.ஆர்.ஷெட்டி ஹெல்த் அண்ட் ரிசர்ச்' என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள 11 டயாலிசிஸ் மையங்களையும் இந்நிறுவனம்

உத்தர கன்னடா:சரியான பராமரிப்பு இல்லாததால், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள, 'டயாலிசிஸ்' மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் 122 மருத்துவமனையில் டயாலிசிஸ் மையங்கள் உள்ளன. இதை பராரிக்கும் பொறுப்பு, 'பி.ஆர்.ஷெட்டி ஹெல்த் அண்ட் ரிசர்ச்' என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள 11 டயாலிசிஸ் மையங்களையும் இந்நிறுவனம் தான் பராமரித்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு அரசு, 28 கோடி ரூபாய் நிதி பாக்கி வைத்துள்ளது.இதனால் ஏற்பட்ட மோதலால், இம்மாவட்டத்தின் டயாலிசிஸ் மையங்களை பராமரிக்கும் பணியை நிறுத்தி விட்டனர். மையத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட வில்லை.டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் பரிதவிக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் டயாலிசிஸ் மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பணம் இருப்போர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். ஏழைகள் அரசு மருத்துவமனையையே நம்பி உள்ளனர். அவர்களின் நலன் கருதி டயாலிசிஸ் மையங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X