செய்தி செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்தனர்.திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டிஸ்வரர் உடனுறை சக்தி கோவிலில்,

- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்தனர்.திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டிஸ்வரர் உடனுறை சக்தி கோவிலில், பிரதோஷத்தையொட்டி அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.கொரோனா மற்றும் புதிய வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வரவும்; மக்கள் பூரண நலம் பெறவும் பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பிரதோஷபூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.உடுமலைஉடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், நடந்த பூஜையில், நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில், நேற்று மாலை நந்திபகவானுக்கு, 16 வகையான பொருட்களால், அபிேஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X