செய்தி செய்தி

தமிழ்நாடு

சீசன் சமயத்தில் உரங்கள் இருப்பு இருக்கா?

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: பருவமழை சீசனில், தேவையான உரங்கள் இருப்பு இருப்பது குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், நீண்ட கால சாகுபடியாக, தென்னை, 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பராமரிக்கப்படுகிறது.மேலும், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக

உடுமலை: பருவமழை சீசனில், தேவையான உரங்கள் இருப்பு இருப்பது குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், நீண்ட கால சாகுபடியாக, தென்னை, 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பராமரிக்கப்படுகிறது.மேலும், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு நிலைப்பயிராக உள்ளது.வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், 10 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு, கொண்டைக்கடலை, கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.உரங்கள் தேவை பருவமழை பெய்துள்ளதால், அனைத்து வகை சாகுபடிக்கும், உரமிடுவது அவசியமாகும். நடப்பு சீசனில், கால்வாய், கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி என மூன்று வகை சாகுபடிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட உரத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக, அடியுரமாகவும், பயிரின் வளர்ச்சிக்கு பயன்படும், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகியவற்றின் தேவை கூடுதலாகியுள்ளது.தற்போது, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், போதியளவு உரம் இருப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனால், 'தனியாரிடம், கூடுதல் விலைக்கு உரம் வாங்க வேண்டியுள்ளது; குறித்த நேரத்தில், உரம் கிடைக்காமல், பாதிக்கப்பட்டுள்ளோம்,' என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, யூரியாவுக்கு, அதிக தட்டுப்பாடு நிலவுகிறது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் அளித்த மனுவில், 'தற்போது, டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் உரங்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே, ஆய்வு செய்து, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், போதியளவு உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.'அப்டேட்' அவசியம்சீசன் சமயங்களில், உரம் பதுக்கி வைத்தல்; அதிக விலைக்கு விற்பது உட்பட முறைகேடுகளை தவிர்க்க, 'உழவன்' மொபைல் செயலி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, வட்டார வாரியாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில், உரங்கள் இருப்பு மற்றும் அதன் விலை குறித்து, 'அப்டேட்' செய்யப்பட்டு வந்தது. தற்போது, முறையாக இத்தகவல்கள் 'அப்டேட்' செய்யப்படாமல், தகவல்கள் தெரிவதில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X