20 ஆண்டுகளுக்கு பின் துமகூரின் ஜெயமங்கலி ஆற்றில் வெள்ளம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
துமகூரு:தொடர் கன மழையால், 20 ஆண்டுகளுக்கு பின் துமகூரின் ஜெயமங்கலி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.துமகூரில் ஜெயமங்கலி என்ற ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன் வரை, வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதன் பின், மழை சரியாக பெய்யாததால் ஆறு வற்றியது.கொரடகரே மதுகிரியின் சுற்று வட்டாரத்தின் நுாற்றுக்கணக்கான கிராமத்தினர் இந்த ஆற்றை நம்பியே உள்ளனர்.தண்ணீர் வற்றியதால்
 20 ஆண்டுகளுக்கு பின் துமகூரின் ஜெயமங்கலி ஆற்றில் வெள்ளம்

துமகூரு:தொடர் கன மழையால், 20 ஆண்டுகளுக்கு பின் துமகூரின் ஜெயமங்கலி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
துமகூரில் ஜெயமங்கலி என்ற ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன் வரை, வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதன் பின், மழை சரியாக பெய்யாததால் ஆறு வற்றியது.கொரடகரே மதுகிரியின் சுற்று வட்டாரத்தின் நுாற்றுக்கணக்கான கிராமத்தினர் இந்த ஆற்றை நம்பியே உள்ளனர்.

தண்ணீர் வற்றியதால் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.இந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை அதிகபட்சமாக பெய்தது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. இந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு பின் ஜெயமங்கலி ஆற்றில் முதன் முறையாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

காற்றாற்று வெள்ளத்தை பார்த்த ஆற்றங்கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சுற்று வட்டார கிராமத்தினர் பலரும் ஆற்றில் ஓடும் தண்ணீரை மொபைல் போன்களில் படமும், வீடியோவும் எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.தங்கள் பகுதிகளில் தண்ணீர் வரும்போது பூஜை செய்து வழிபடுகின்றனர். ஆற்றில் யாரும் இறங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X