பலத்த மழையால் பெங்களூரு பாதிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.காவல்பைரசந்திரா காவிரி நகரின், 'ஏ' பிளாக்கில், தாழ்வான பகுதியில் குடியிருக்கும் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இரவு

பெங்களூரு:பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

காவல்பைரசந்திரா காவிரி நகரின், 'ஏ' பிளாக்கில், தாழ்வான பகுதியில் குடியிருக்கும் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இரவு முழுதும் மக்கள் துாங்காமல் தண்ணீரை வெளியேற்றுவதிலேயே காலம் கழித்தனர்.மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தண்ணீர் வெளியேறினாலும் சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.மடிவாளா, கோரமங்களா, எச்.எஸ்.ஆர்., லே அவுட், விவேக்நகர், எச்.ஏ.எல்., ஹெப்பால், ஆர்.டி.நகர், சஞ்சய்நகர், வசந்த்நகர், சிவாஜிநகர், கமர்சியல் தெரு, அசோக்நகர், எம்.ஜி.சாலை, ஹலசூரு, இந்திராநகர்.நாகவரா, ஹென்னுார், பானஸ்வாடி, ஈஜிபுரா, சிக்கஜாலா, பீன்யா, பாகல்குண்டே, காந்திநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம், ராஜாஜிநகர், யஷ்வந்த்பூர், விஜயநகர், கிரிநகர், பசவனகுடி, பனசங்கரி உட்பட நகரின் பல பகுதிகளில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

மெஜஸ்டிக், சிவானந்தா சதுக்கம், காவிரி சதுக்கம் ஆகிய சுரங்க பாதைகளில் தண்ணீர் நிரம்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதற்கிடையில், பசவனகுடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவி சுப்பிரமணியாவின் கிரிநகரில் உள்ள அலுவலகத்துக்கும் நீர் புகுந்தது. தகவலறிந்த எம்.எல்.ஏ., தானே தண்ணீரை வெளியேற்றிதுாய்மைப்படுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X