தமிழ்நாடு

திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்றுமுன்தினம் கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.அதோடு, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று மதியம், 3:00 மணிக்கு, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம்
 திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்றுமுன்தினம் கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.அதோடு, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று மதியம், 3:00 மணிக்கு, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. மும்மூர்த்திகள் கோவில் வளாகம், கன்னிமார் கோவில் வளாகத்தை சூழ்ந்து பல அடி உயரத்திற்கு வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது.மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறித்து, தகவல் கிடைத்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவில் நடை சார்த்தப்பட்டு, கோவில் ஊழியர்கள் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு, பக்தர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். கோவில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டது. இரண்டு மணி நேரம், கோவில் வளாகத்தை சூழ்ந்திருந்த வெள்ளம், வடியத் துவங்கியது.மாலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜை நடத்தப்பட்டு, மீண்டும் நடை சார்த்தப்பட்டது. கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தடை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X