செய்தி செய்தி

தமிழ்நாடு

வரைபடத்துடன் மரங்கள் பட்டியல்  மாவட்ட பசுமை குழுக்களுக்கு உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: பல்வேறு அரசுத்துறையின் மரம் வளர்ப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கவும், வளர்ந்த மரங்களை பாதுகாக்கவும், மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மரங்களை கணக்கிட்டு, சொத்து பதிவேடு தயாரிக்க, பசுமை குழு வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு நிலம் மற்றும் பொது இடங்கள், பொது வழித்தடங்களில் வளர்ந்துள்ள மரங்கள் குறித்த விவரங்களை,

திருப்பூர்: பல்வேறு அரசுத்துறையின் மரம் வளர்ப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கவும், வளர்ந்த மரங்களை பாதுகாக்கவும், மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மரங்களை கணக்கிட்டு, சொத்து பதிவேடு தயாரிக்க, பசுமை குழு வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு நிலம் மற்றும் பொது இடங்கள், பொது வழித்தடங்களில் வளர்ந்துள்ள மரங்கள் குறித்த விவரங்களை, வரைபடத்துடன் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது இடம், அரசு நிலங்களில் வளர்க்கப்படும் மரக்கன்று மற்றும் வளர்ந்துள்ள மரங்கள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. மரங்களின் இனம் வாரியாக, சுற்றளவு, உயரம் போன்ற விவரங்களுடன் பட்டியல் தயாராகிறது. வளர்ந்துள்ள இடம், மரத்தின் வகை, மரத்தின் உயரம், சுற்றளவு, சிறப்பு குறித்த விளக்கத்துடன் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இனி, மரங்களை வெட்ட மாவட்ட பசுமைக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி கிளைகளையோ, மரத்தையோ சேதப்படுத்தினால், வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X