ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை பா.ஜ., தேசிய நிர்வாகி எச்சரிக்கை

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாலக்காடு: ''பாலக்காட்டில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைமை குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.பாலக்காடு மாவட்டம் எலபுள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித் 27, ஆர்.எஸ்.எஸ்., தொண்டரான இவரை நேற்று முன்தினம் காலை, மர்ம நபர்கள் படுகொலை செய்தனர்.

பாலக்காடு: ''பாலக்காட்டில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைமை குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.பாலக்காடு மாவட்டம் எலபுள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித் 27, ஆர்.எஸ்.எஸ்., தொண்டரான இவரை நேற்று முன்தினம் காலை, மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.சஞ்ஜித்தின் குடும்பத்துக்கு, ஆறுதல் தெரிவிக்க வந்த பா.ஜ., தேசிய தலைமை குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:சஞ்ஜித்தின் கொலை அரசியல் வன்முறையையொட்டி நடந்தது அல்ல. இது தீவிரவாத தாக்குதல். கொலை நடந்து 24 மணி நேரம் கழித்தும், ஒரு குற்றவாளியை கூட போலீசார் கைது செய்யவில்லை. இதற்கு முன்பும், சஞ்ஜித்தை கொலை செய்ய, மூன்று முறை முயற்சி நடந்துள்ளது. அதில், குற்றவாளிகளை கைது செய்திருந்தால், இப்படியான ஒரு கொடூர கொலை நடந்திருக்காது.சமூகத்துக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், மாநிலத்தில் கொலைகள் நடந்து கொண்டிருக்கும் போதும், முதல்வர் இதுகுறித்து எதுவுமே பேசுவதில்லை. ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதனிடையே, தேசிய நெடுஞ்சாலை கண்ணனுார் பகுதியில் உள்ள புதரில், சஞ்ஜித்தை கொலை செய்ய பயன்படுத்திய நான்கு அரிவாள்கள் வீசப்பட்டிருந்ததை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-நவ-202110:30:19 IST Report Abuse
jayvee கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் இமாம்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பாதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி .. இந்தியாவை பாஜக ஆள்வது மட்டும் ஹிந்துத்வா ஆட்சி என்று குறை கூறும் RSB ஊடகங்களை என்ன சொல்வது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X