பொது செய்தி

தமிழ்நாடு

திருமாவளவன் பேச்சு; சிவனடியார்கள் போராட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: ஹிந்து மதத்தை அவதுாறாக பேசி வரும் திருமாவளவனை கண்டித்து, திருப்பூரில் சிவனடியார்கள் நுாதன போராட்டம் நடத்தினர்.சில நாட்களுக்கு முன், ஹிந்து மத வழிபாடுகள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவதுாறாக பேசியுள்ளார். இதுகுறித்து, பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன்,

திருப்பூர்: ஹிந்து மதத்தை அவதுாறாக பேசி வரும் திருமாவளவனை கண்டித்து, திருப்பூரில் சிவனடியார்கள் நுாதன போராட்டம் நடத்தினர்.சில நாட்களுக்கு முன், ஹிந்து மத வழிபாடுகள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவதுாறாக பேசியுள்ளார். இதுகுறித்து, பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், அனைத்து சிவனடியார் திருக்கூட்டத்தினர், தேவாரம், திருவாசகம், சிவபுராண பாடல்களை பாராயணம் செய்து, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பாராயணம் செய்தனர். அதன்பின், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவன் மீது புகார் அளித்தனர்.சிவனடியார்கள் கூறுகையில், 'திருமாவளவன், ஹிந்து மத வழிபாட்டு முறைகள், அருளாளர்கள் குறித்து, உண்மைக்கு புறம்பாக சித்தரித்து, அவதுாறாக பேசிவருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். பிற மதவழிபாட்டில் தலையிடும் அவருக்கு, நல்ல புத்தி பிறக்க வேண்டுமென, சிவாலயத்தின் முன்பாக, திருமுறை பாராயணம் செய்து வேண்டுதல் நடத்தியுள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X