தமிழ்நாடு

மாணவி தற்கொலை வழக்கு பள்ளி முதல்வர் ஜாமின் மனு 

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாணவி, பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில், கைதான பள்ளி முதல்வர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால்

கோவை: கோவை மாணவி, பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில், கைதான பள்ளி முதல்வர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம், மாணவி பல முறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனை, 46, கைது செய்யக்கோரி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கைதான ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்கவும் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X