தமிழ்நாடு

மாணவியின் நோட்டு, புத்தகங்கள் கைப்பற்றி போலீசார் விசாரணை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் மாணவியின் நோட்டு புத்தகங்களை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்; மாணவியின் மொபைல்போன் விபரங்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவையை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவி முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31, பள்ளி

கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் மாணவியின் நோட்டு புத்தகங்களை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்; மாணவியின் மொபைல்போன் விபரங்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவையை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவி முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31, பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சன், 46 ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி, அதில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், மாணவியின் வீட்டிலிருந்து, நேற்று, நோட்டு புத்தகங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மாணவியின் பெற்றோரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.சைபர் க்ரைம் போலீசார் விசாரணைதற்கொலை செய்த மாணவி மற்றும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே நடந்த 'வாட்ஸ்-ஆப்' என்று, ஒரு பதிவு வெளியாகி பரவி உள்ளது. இதன் உண்மை தன்மை குறித்தும், மாணவியின் மொபைல்போன் அழைப்பு விபரங்கள், மாணவியின் மொபைலில் இருந்து ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டதா, தற்கொலை செய்த தினத்தில் மாணவியின் மொபைல் போனுக்கு சென்ற அழைப்பு, எஸ்.எம்.எஸ்., விபரங்கள் போன்ற தகவல்களை திரட்டி, சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், மாணவி - ஆசிரியரின் உரையாடல் என்று, ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த தகவல்களை சமூகவலைதளங்களில் போலீசாருக்கு தெரியாமல் பரப்பும் நபர்கள் யார், இதன் பின்னணி என்ன என்பது குறித்தும், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X