உ.பி.,யை சீரழித்தது கடந்த கால ஆட்சியாளர்கள் தான் : பிரதமர் குற்றச்சாட்டு!  

Updated : நவ 18, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (36+ 8)
Share
Advertisement
சுல்தான்பூர் : ''உத்தர பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மாநில வளர்ச்சி குறித்து துளியும் கவலைப்படவில்லை. அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வசித்த பகுதிகளின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினர். உ.பி.,யின் கிழக்கு பகுதியான பூர்வாஞ்சல் வறட்சியாலும், 'மாபியா' ஆதிக்கத்தாலும் சீரழிந்தது. இப்போது அப்பகுதியில் வளர்ச்சிக்கான புதிய
 உ.பி.,ஆட்சியாளர்கள், குற்றச்சாட்டு விரைவு சாலை, ஆவேசம்

சுல்தான்பூர் : ''உத்தர பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மாநில வளர்ச்சி குறித்து துளியும் கவலைப்படவில்லை. அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வசித்த பகுதிகளின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

உ.பி.,யின் கிழக்கு பகுதியான பூர்வாஞ்சல் வறட்சியாலும், 'மாபியா' ஆதிக்கத்தாலும் சீரழிந்தது. இப்போது அப்பகுதியில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை பா.ஜ., அரசு எழுதி வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகரான லக்னோவில் இருந்து பூர்வாஞ்சல் என அழைக்கப்படும் உ.பி.,யின் கிழக்கு பகுதியில் உள்ள காஸிபூர் வரையில், 341 கி.மீ., தொலைவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடியபூர்வாஞ்சல் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.


உபியை ஒருங்கிணைக்கும் பூர்வாஞ்சல் விரைவு சாலை டில்லி டு காஜிப்பூருக்கு 10 மணி நேரம்


விமான ஓடுதளம்



இத்திட்டத்திற்கு 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த விரைவு சாலையை ஒட்டி, விமானப் படையின் அவசரகால பயன்பாட்டுக்காக 3.2 கி.மீ., தொலைவுக்கு விமான ஓடுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். டில்லியில் இருந்து நம் விமானப் படைக்கு சொந்தமான, 'சி - 130 ஹெர்குலஸ்' போர் விமானத்தில் வந்த பிரதமர் மோடி, விரைவு சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளத்தில் வந்து இறங்கினார்.அவரை உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

விரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பின் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:உ.பி.,யின் சாலை வசதிகள் குறித்து கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் துளியும் அக்கறை செலுத்தவில்லை. சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தன.
கிழக்கு உ.பி.,யைச் சேர்ந்த மக்கள் லக்னோ வருவது, மகாபாரத போரில் வெல்வதை போல இருந்தது.மாநிலம் முழுதும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, மருத்துவ வசதிகள் இல்லாத நிலையே நீடித்தது. உ.பி., மக்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டனர்.கடந்த கால அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் தொழிற்சாலைகள் திறப்பது குறித்து கனவு கண்டது. எனவே தான் பல தொழிற்சாலைகள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.


மக்களின் கனவு சிதைப்பு



டில்லியிலும், உ.பி.,யிலும் குடும்ப ஆட்சி தலை துாக்கியது. இந்த இரு அரசுகளும் கூட்டணி அமைத்து உ.பி., மக்களின் கனவுகளை சிதைத்தனர். உ.பி.,யை இதுவரை ஆண்ட தலைவர்கள் மாநில வளர்ச்சி குறித்து துளியும் கவலைப்படவில்லை. அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வசித்த பகுதிகளின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினர்.உ.பி.,யின் கிழக்கு பகுதியான பூர்வாஞ்சல் வறட்சியாலும், 'மாபியா' ஆதிக்கத்தாலும் சீரழிந்தது. இப்போது அப்பகுதியில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை பா.ஜ., அரசு எழுதி வருகிறது.இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டதன் வாயிலாக, பூர்வாஞ்சல் பகுதியின் பொருளாதார நிலை மேம்படும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.நிகழ்ச்சி முடிந்த பின், விரைவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளத்தில் இருந்து, நம் விமானப் படை போர் விமானங்கள் வானில் நிகழ்த்திய சாகசங்களை பிரதமர் பார்த்து ரசித்தார்.


விரைவு சாலையின் சிறப்பு



* திட்டத்தின் மொத்த மதிப்பு 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்

* லக்னோவின் சந்த்சராய் கிராமத்தில் துவங்கி, காஸிப்பூரின் ஹைதாரியா கிராமம் வரை 341 கி.மீ., துாரத்திற்கு ஆறு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது

* அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க கூடிய அளவில் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

* விரைவு சாலை அமைந்துள்ள பகுதியில் லக்னோ, பாராபங்கி, அமேதி, சுல்தான்பூர், அயோத்தி, அம்பேத்கர் நகர், அசம்கர், மாவூ, காஸிபூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன

* 22 மேம்பாலங்கள், 7 ரயில்வே மேம்பாலங்கள், 7 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 6 சுங்கச் சாவடிகள், 45 சுரங்க சாலைகள், 139 சிறிய சுரங்க சாலைகள், 87 பாதசாரிகளுக்கான சுரங்க பாதைகள் உள்ளன

* விரைவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடுதளத்தில் போர் விமானங்கள்தரையிறங்க முடியும். இதனால் எல்லை பகுதியில் அத்துமீறும் சீன
படையினருக்கு, நம் படையினர் நெருக்கடி கொடுக்க முடியும்.


தணிக்கையாளர்களுக்கு மோடி பாராட்டு



சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில், முதலாவது தணிக்கை தின விழா டில்லியில் நேற்று நடந்தது. மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:ஒரு காலத்தில் கணக்கு தணிக்கை என்றாலே, அரசுக்கு எதிரானதாக பொதுவாக கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது சி.ஏ.ஜி.,யின் அறிக்கைகள், சிறந்த நிர்வாகத்துக்கு மதிப்பை கூட்டும் முக்கிய சாதனமாக அமைந்துள்ளது.

தவறான நடைமுறைகளால் வங்கிகளின் வாராக் கடன் முன்பு உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால், அதை வெளியே தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால், இந்த அரசு நேர்மையுடன், மக்கள் முன் அந்த தகவல்களை முன்வைத்தது. பிரச்னை உள்ளது என்பதை உணர்ந்தால் தான், அதற்கு தீர்வு காண முடியும்.முன்பெல்லாம் தகவல்கள், கதைகள் வழியாக கூறப்பட்டு, அதுவே வரலாறாக மாறியது.ஆனால், தற்போது, 'டேட்டா' எனப்படும் உண்மை தகவல்களே, வரலாற்றை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தான், பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். வெளிப்படைதன்மையால், அது மிகப் பெரிய பலனை அளித்து வருகிறது. கணக்கு தணிக்கையாளர்களும் மாறிவரும்
சூழலுக்கு ஏற்ப மாறியுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
18-நவ-202113:29:11 IST Report Abuse
PKN கல்யாணசிங்கை திட்டுறாறு உட்கட்சி விவகாரம்
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
17-நவ-202118:39:53 IST Report Abuse
g.kumaresan ஐம்பது ஐந்து வருடம் என்ன நல்லது செய்தது.ஓட்டுக்கு இரெண்டாயிரம் இதுதான் திராவிடம்.ஊழல் இல்லாத ஆட்சி தமிழர்களுக்கு பிடிக்காது.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-நவ-202114:41:42 IST Report Abuse
Visu Iyerபாஜகவில் ஊழல் இல்லை என்று எப்படி சொல்றீங்க.. பட்டியலிட்டு சொல்ல ஒரு பட்டியல் தயாராக இருக்கு...
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
17-நவ-202118:20:19 IST Report Abuse
Samathuvan மேலும் ஒரூ உண்மை தெரிஞ்சாகணும், பண மதிப்பிழப்பு செய்தப்போ, அந்த 2000 ரூபாய் நோட்டை எங்கே இரவோட இரவா அச்சு அடிசிங்க அதுலே ஏன் ரிசெர்வ் பேங்க் கவர்னரோட கையெழுத்து இல்ல. எவ்வளவு பழைய நோட்டு திரும்பி வந்துச்சு? எத்தனை புதிய நோட்டு அடிச்சீங்க? இதனால என்ன சாதிச்சீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X