தமிழ்நாடு

புதிய மாநகராட்சிகளில் மட்டுமே வார்டு மறுவரையறை!: தாறுமாறான வார்டு பிரிப்பால் ஆளுங்கட்சியினர் அச்சம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
-நமது சிறப்பு நிருபர்-பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருப்பதால், அந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம், ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பெருநகரமாக மாற்றப்பட்டு, 155



-நமது சிறப்பு நிருபர்-

பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருப்பதால், அந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம், ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பெருநகரமாக மாற்றப்பட்டு, 155 வார்டுகள், 200 வார்டுகளாக்கப்பட்டன. கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இருந்த, 72 வார்டுகள், 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. அதன்படி, 2011ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பல காரணங்களால், ஐந்தாண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் வார்டு மறுவரையறை நடந்தது. அப்போது, அ.தி.மு.க., ஓட்டு வங்கியைக் கணக்கிட்டு, வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. ஒரு வார்டில், 40 ஆயிரம் வாக்காளர்களும், இன்னொரு வார்டில், வெறும் ஏழாயிரம் வாக்காளர்களும் இருப்பதுபோல வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை மாநகராட்சியில் வாக்காளர் எண்ணிக்கை, ஏரியா இரண்டிலுமே அப்பட்டமான முரண்பாடு காணப்படுகிறது.


அவகாசம் கிடைக்கவில்லை

எதிர்க்கட்சியினரின் ஓட்டு வங்கிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில், இவ்வாறு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், ஆட்சேபங்களை மீறி, பெரும்பாலான வார்டுகளில் எந்த மாற்றமும் இன்றி, அதே பகுதிகள் மற்றும் வாக்காளர்களுடன் மறுவரையறை செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், வார்டு மறுவரையறை நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்புப் பணிகள் என, அதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.ஆனால், வரும் ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலை நடத்த வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், மறுவரையறைக்கான கால அவகாசமே கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வார்டு மறுவரையறை முடிந்த பின்பும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பும், புதிதாக பல மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.புதிய நகராட்சிகள், மாநகராட்சிகளில் பல்வேறு உள்ளாட்சிகளும் சேர்க்கப்பட்டு, வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால், அந்த உள்ளாட்சிகளில் மட்டும் வார்டு மறுவரையறை செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் பழைய பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பேயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோரிக்கைமேயர், சேர்மன்களுக்கு நேரடித் தேர்தல் இல்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தற்போதுள்ள வார்டு மறுவரையறைப்படி தேர்தல் நடத்தினால், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகளில் அ.தி.மு.க.,ஜெயித்து விடுமென்று ஆளுங்கட்சியினர் அச்சப்படுகின்றனர். அதனால், பழைய மாநகராட்சிகளில் மட்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட வேண்டுமென்பது அவர்கள் கோரிக்கையாகவுள்ளது.இதற்கேற்ப பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு முதற்கட்டமாக தேர்தலை நடத்திவிட்டு, கொஞ்சம் கால அவகாசம் பெற்று, வார்டு மறுவரையறை செய்தபின், மாநகராட்சிகளுக்குத் தனியாக தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது. அதேபோன்று, மாநகராட்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மேயர்களுக்கான ஆண், பெண் ஒதுக்கீடும் மாறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனித்தனியாக தேர்தல் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது வெள்ள நிவாரணப் பணிகளில் மட்டுமே, அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகளில் விரிவாக்கப் பகுதிகளையும் சேர்த்து, வார்டு மறுவரையறை செய்வதற்கான வேலைகள் நடக்கின்றன. அதே நேரத்தில், பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வாய்ப்பில்லை.கோவை, மதுரை போன்ற மாநகராட்சிகளில், ஒரு வார்டில் மிக அதிகமாகவும், மற்றொரு வார்டில் மிகக்குறைவாகவும் வாக்காளர் எண்ணிக்கை இருப்பது போல வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளன. அதற்கு இப்போது ஒன்றும் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஜனவரிக்குள் தேர்தலை நடத்த ஆணையம் தயாராகவுள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.ஜனவரிக்குள் தேர்தலை நடத்துவதில், மாநில தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளது. பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யாவிட்டால், தோல்வி கிடைக்குமென்று கட்சிக்காரர்கள் கதறுகிறார்கள். தத்தளிக்கிறது தமிழக அரசு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X