சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சமஸ்கிருதத்தில் சினிமா படம் எடுக்கிறேன்!

Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சமஸ்கிருத மொழியில், 'சாகுந்தலை' காவியத்தை சினிமா படமாக எடுப்பதுபற்றி கூறுகிறார், கர்நாடாவைச் சேர்ந்த துஷ்யந்த் ஸ்ரீதர்: நம் நாட்டின் பிற மொழிகளை போல மிக அதிகம் பேரால் பேசப்படும் மொழிஅல்ல சமஸ்கிருதம். அத்தகைய சமஸ்கிருதத்திற்கு, என் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக சமஸ்கிருதத்தில்திரைப்படத்தை இயக்குகிறேன். செய்வதை, பலரும்பாராட்டும் வகையில் பெரிதாக செய்ய
சொல்கிறார்கள்

சமஸ்கிருத மொழியில், 'சாகுந்தலை' காவியத்தை சினிமா படமாக எடுப்பதுபற்றி கூறுகிறார், கர்நாடாவைச் சேர்ந்த துஷ்யந்த் ஸ்ரீதர்: நம் நாட்டின் பிற மொழிகளை போல மிக அதிகம் பேரால் பேசப்படும் மொழிஅல்ல சமஸ்கிருதம். அத்தகைய சமஸ்கிருதத்திற்கு, என் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக சமஸ்கிருதத்தில்திரைப்படத்தை இயக்குகிறேன். செய்வதை, பலரும்பாராட்டும் வகையில் பெரிதாக செய்ய வேண்டும் என்பதற்காக, புகழ்பெற்ற காப்பியமான, சாகுந்தலத்தை திரைப்படம் ஆக்குகிறேன்.

சாகுந்தலம் இதர இந்திய மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள், தமிழின் சிலப்பதிகாரத்தை, ஆங்கிலத்தில் தயாரித்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைந்து விட்டன. அப்படிப்பட்ட தயாரிப்புகள் வெறும் நெருடலாக அமையும். அதனால் தான் சாகுந்தலம் எழுதப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தில் உருவாக்கி இருக்கிறேன்.சிறு வயது முதல் சாகுந்தலம் படித்து வந்தாலும், அதை அகலத் திரையில் கொண்டு வருவதில் சிரமங்கள் உள்ளன. காளிதாசர் எழுதிய எல்லாவற்றையும் ஒரு திரைப்படத்திற்குள் கொண்டு வர முடியாது. இப்போதைய புதிய தலைமுறையின் ரசிப்புத்தன்மையை மனதில் வைத்து, சாகுந்தலம் கதையை வடிவமைத்திருக்கிறேன்.

நான்காம் நுாற்றாண்டில், 'சிங்கிள் மதராக' மகனை வளர்த்த சகுந்தலையில் காதல், பட்ட துன்பங்கள், அவமானங்கள் பற்றிய கதை தான், என் திரைப்படமான சாகுந்தலம்.படத்தில் 95 சதவீதம் சமஸ்கிருத வசனங்கள் வரும்; மீதி, பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஆங்கிலத்தில் 'சப் டைட்டில்'கள் காண்பிக்கப்படும். படத்தில் வரும் நடன, பாடல் காட்சிகளில் ஒடிசி, மோகினியாட்டம், யக் ஷகானம் வடிவில் இருக்கும். பாடல்கள் கர்நாடக, ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருக்கிறோம். தமிழில் திருக்குறளிலிருந்தும் சில வரிகள் எடுக்கப்பட்டுள்ளன. படக்காட்சிகள், அரங்க அமைப்புகள், சாளுக்கிய, பல்லவ, விஜயநகர ஆட்சிக்கால கலை நுணுக்கங்களை பிரதிபலிக்கும்.
இப்போது மொழி ஒரு பிரச்னையே இல்லை. மக்களின் ரசனைகள் மாறியுள்ளன. பல மொழி படங்களை பார்க்க துவங்கி விட்டனர். கொரிய மொழியில் வரும் நிகழ்ச்சியை, கொரிய மொழி தெரிந்தா அனைவரும் பார்க்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் அணியும் உடைகள், இயற்கை வண்ணம் ஏற்றப்பட்ட கதரில் தைக்கப்பட்டவை. இறவா கவிஞர் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி படத்திற்கு இசையமைத்துள்ளார். லைப் ஆப் பை என்ற ஆங்கில படத்தின் புகழ், சாய் ஷரவண் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு உள்ளது. இப்படம், டிசம்பர்மாதம், 'ஓடிடி' எனப்படும் இணையதள சினிமா தளத்தில் வெளியாகும்!

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
17-நவ-202119:39:40 IST Report Abuse
Nachiar இன்று இங்கிலாந்தில் பல பாடசாலைகளில் பயிற்றுவிக்கப் படும் மொழி சம்ஸ்கிருதம். நான் ப்ரம்மணா ர் அல்ல சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் அம் மொழியின் அழகை கோவில்களில் ஒலிக்க கேட்டதாலும் அம் மொழியின் செல்வத்தை வாசித்து அறிந்ததாலும் இன்று ஒன்லைனில் கற்க தொடங்கியுள்ளேன். சனாதன தர்மத்திர்ட்க்கும் பாரத கலாச்சாரத்திற்கும் எதிராக இருப்பதால் நான் பல வருடங்களாக கோலிவுட் சினிமா பார்ப்பது இல்லை. உங்கலின் இந்த படத்தை பார்க்க மிக ஆவலுடன் உள்ளேன். வாழ்க உங்கள் சேவை
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
17-நவ-202118:31:21 IST Report Abuse
Srivilliputtur S Ramesh ரொம்ப சந்தோஷம் .. தங்கள் சமஸ்கிருதப்பணி மிகச்சிறந்தது.... ஆயுஷ்மான் பவா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-நவ-202116:34:25 IST Report Abuse
Sampath Kumar எது உங்க மொழி வெறியை காட்டுகிறது என்று சொன்னால் நான் தேச விரோதி ஆகி விடுவேன் இல்லையா துஷ்யந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X