செய்தி செய்தி

தமிழ்நாடு

கால் விரல் நுனி மடக்கி நடந்து சிறுமி அசத்தல் 

Added : நவ 16, 2021
Share
Advertisement
வால்பாறை: கால் விரல் நுனியில் வேகமாக நடக்கும், பள்ளி மாணவியை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த, சதீஷ்வரன் - சிந்துஜா தம்பதியின் மகள் பூமிகா,4. இவர், வால்பாறை நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார்.இவர், தனது இரண்டு கால்களின் விரல்களை மடக்கியபடி, கால்விரல் நுனியில் வேகமாக நடந்தும், சமதளத்தில் வேகமாக ஓடியும்

வால்பாறை: கால் விரல் நுனியில் வேகமாக நடக்கும், பள்ளி மாணவியை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த, சதீஷ்வரன் - சிந்துஜா தம்பதியின் மகள் பூமிகா,4. இவர், வால்பாறை நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார்.இவர், தனது இரண்டு கால்களின் விரல்களை மடக்கியபடி, கால்விரல் நுனியில் வேகமாக நடந்தும், சமதளத்தில் வேகமாக ஓடியும் அனைவரையும் ஆச்சரியமூட்டுகிறார்.எவ்வித பிடிப்பும் இல்லாமல், சிறுமி கால்களின் விரல்களை மடக்கியபடி நடந்து செல்வது, வால்பாறை பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின், பெற்றோர் கூறுகையில், 'குழந்தை பருவம் முதல் சுறுசுறுப்பாக இருப்பாள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞாபகசக்தி அதிகமுள்ளது. கால் விரல்களை மடக்கி நடக்க நாங்கள் எந்த பயிற்சியும் அளிக்கவில்லை. அவளாகவே நடந்து செல்வதை கண்டு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X