கோதவாடி குளத்துக்கு நீர் நிறுத்தம் கூடுதல் நாட்கள் வழங்க எதிர்பார்ப்பு| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

கோதவாடி குளத்துக்கு நீர் நிறுத்தம் கூடுதல் நாட்கள் வழங்க எதிர்பார்ப்பு

Added : நவ 16, 2021
Share
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளத்துக்கு திறக்கப்பட்ட, பி.ஏ.பி., தண்ணீர், நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், குருநல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோதவாடி குளம், 350 ஏக்கர் பரப்பில் உள்ளது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக குளம் நீரின்றி வறண்டு காணப்பட்டது.இந்நிலையில், பி.ஏ.பி., திட்டத்தில் மெட்டுவாவி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளத்துக்கு திறக்கப்பட்ட, பி.ஏ.பி., தண்ணீர், நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், குருநல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோதவாடி குளம், 350 ஏக்கர் பரப்பில் உள்ளது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக குளம் நீரின்றி வறண்டு காணப்பட்டது.இந்நிலையில், பி.ஏ.பி., திட்டத்தில் மெட்டுவாவி கால்வாயில் இருந்து, வடசித்துார் வழியாக தடுப்பணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஏழு நாட்கள் வழங்கப்பட்ட தண்ணீரால், ஆற்றில் அமைந்த தடுப்பணைகளை மட்டுமே நிரப்பியது.
கோதவாடி குளத்துக்கு நீர் வரவில்லை.மேலும், குளத்தின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள செட்டியக்காபாளையம் கிளைக்கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டது. பாசன நீரை பயன்படுத்தும் விவசாயிகள் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டால், குளத்துக்கு தண்ணீர் திறப்பது நேற்று, திடீரென நிறுத்தப்பட்டது.இதனால், குளத்தில் மண் வெட்டி எடுக்கப்பட்ட பள்ளத்தில் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது. வறட்சி காலத்தில் சுற்றியுள்ள பாசன கிணறுகளுக்கு இந்நீர் எவ்வித பலனும் அளிக்காது என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதனால், இன்னும் சில நாட்களுக்கு, வடசித்துார் வழியாக கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X