தமிழ்நாடு

சென்னை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழக்கமான எண்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: சென்னை - பாலக்காடு; திருவனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல் வழக்கமான எண்களுடன் இயங்கும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பொள்ளாச்சி வழித்தடத்தில், சென்னை - பாலக்காடு; திருவனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குகின்றன. பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் இந்த ரயில்கள், கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்டு, பல மாதங்களுக்கு

பொள்ளாச்சி: சென்னை - பாலக்காடு; திருவனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல் வழக்கமான எண்களுடன் இயங்கும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பொள்ளாச்சி வழித்தடத்தில், சென்னை - பாலக்காடு; திருவனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குகின்றன. பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் இந்த ரயில்கள், கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்டு, பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட போது, அவற்றின் எண்கள் மாற்றப்பட்டு, சிறப்பு ரயில்களுக்குரிய தற்காலிக எண்கள் கொடுக்கப்பட்டன.இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயில்களுக்கான எண்களை மாற்றி, வழக்கமான ரயில்களுக்கான எண்களுடன் இயங்கும் என அறிவித்துள்ளது.அதன்படி, சென்னை - பாலக்காடு மார்க்கத்தில், 02651 என்ற எண்ணில் இயங்கிய ரயில், 22651 என்ற எண்ணிலும், எதிர் மார்க்கத்தில், பாலக்காடு - சென்னை இடையே, 02652 என்ற எண்ணில் இயங்கிய ரயில், 22652 என்ற எண்ணிலும் இயங்கும்.திருவனந்தபுரம் - மதுரை இடையே, 06343 என்ற எண்ணில் இயங்கிய ரயில், 16343 என்ற எண்ணிலும், எதிர் மார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் இடையே, 06344 என்ற எண்ணில் இயங்கிய ரயில், 16344 என்ற எண்ணிலும் இயங்கும்.முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், இந்த வழக்கமான எண்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X