ஜாகிர் நாயக் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவித்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி

புதுடில்லி:முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவித்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக 'பீஸ் டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார்.

அத்துடன், முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியது உள்ளிட்ட காரணங்களால், அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2016ல் மத்திய அரசு தடை விதித்தது.சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பித்த இந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஜூலை 1ல், வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டினர் 17 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர், ஜாகிர் நாயக்கின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு, தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக், தற்போது மலேஷியாவில், அரசு ஆதரவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-நவ-202100:39:31 IST Report Abuse
Milirvan பெருச்சாளி போல நாட்டை விட்டோடிய இவனை ஆதரிக்கும் கும்பல் இங்கு புழுத்துப்போயுள்ளது.. பகுதித்தறிவு அவசியம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X