துளிகள் செய்தி

தமிழ்நாடு

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை விழா: மண் விளக்குகள் விற்பனை 'ஜோர்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை 'களை' கட்டியுள்ளது; இந்தாண்டு, புதிய வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.திருக்கார்த்திகைக்கு



உடுமலை: திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை 'களை' கட்டியுள்ளது; இந்தாண்டு, புதிய வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.திருக்கார்த்திகைக்கு தேவையான தீபங்கள், உடுமலை, புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யபட்டு விற்பனைக்கு வருகிறது.திருக்கார்த்திகை தினம் நெருங்கி வரும் நிலையில், மண் விளக்குகள் விற்பனை 'களை' கட்டியுள்ளது. உடுமலை சந்தை ரோட்டில், மண் விளக்குகள் விற்பனை கடைகள் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளன.சிறிய சுட்டி விளக்குகள், ஒரு டஜன், 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள், 150 ரூபாய் வரை விற்கிறது.இந்தாண்டு, புதிதாக விநாயகர் சிலையுடன் கூடிய, ஐந்து முக மண் விளக்கு, பெண்கள் கைகளில் விளக்கு ஏந்திய படியான விளக்கு, கண்ணாடி குடுவையில் அமைக்கப்பட்ட மண் விளக்கு, அழகான பொம்மை வடிவங்களில் விளக்கு என பல்வேறு ரக விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விளக்குகள், 50 முதல், 100 ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய முறையாகவும்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால், மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது'.'கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை பாதித்தது. நடப்பாண்டு, அச்சம் நீங்கி, வாழ்வியல் சூழல் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதால், விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், கடைகளில் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X