பொது செய்தி

இந்தியா

கடற்படையில் இணைகிறது ஏவுகணை அழிப்பு கப்பல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியக் கடல் பகுதியில் சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை சமாளிக்க ஏவுகணை அழிப்பு போர்கப்பல் மற்றும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.இந்திய கடற்படையின்துணை தளபதி சதீஷ் நாம்தியோ கோர்மேட் கூறியதாவது:நம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் கப்பல் கட்டும் தளங்களில் 39க்கும் மேற்பட்ட

புதுடில்லி:இந்தியக் கடல் பகுதியில் சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை சமாளிக்க ஏவுகணை அழிப்பு போர்கப்பல் மற்றும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.

இந்திய கடற்படையின்துணை தளபதி சதீஷ் நாம்தியோ கோர்மேட் கூறியதாவது:நம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் கப்பல் கட்டும் தளங்களில் 39க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்திய கடல் பகுதியில் சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க புதிதாக ஏவுகணை அழிப்பு போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏவுகணை அழிப்பு கப்பலான, 'விசாகப்பட்டினம்' வரும் 21ம் தேதியன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் படையில் இணைக்கப்படும்.
நீர்மூழ்கி கப்பலான, 'வேலா' வரும் 25ல் கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங் முன்னிலையில் படையில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X