அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி, 17 வயது மாணவி, பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக, முதல்வர் மீரா ஜாக்சன், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில், இச்சம்பவத்திற்கு காரணமான

உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி, 17 வயது மாணவி, பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக, முதல்வர் மீரா ஜாக்சன், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில், இச்சம்பவத்திற்கு காரணமான அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழகம் முழுவதும் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவ்வகையில், உடுமலை அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவியர் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லுாரி நுழைவு வாயிலில், திரண்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். கோவையில் கைது செய்யப்பட்ட முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியரின் பாதுகாப்புக்காக தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என, கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X