துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஆதிவாசி மக்களுக்காக 'ஆம்புலன்ஸ்' சேவை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோத்தகிரி: கோத்தகிரியில் இயங்கி வரும், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க (நாவா) அலுவலக வளாகத்தில், ஆம்புலன்ஸ் மற்றும் கல்வி சேவை வாகனம் வழங்கும் விழா நடந்தது.'நாவா' செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காரம் போஸ்லே, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை

கோத்தகிரி: கோத்தகிரியில் இயங்கி வரும், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க (நாவா) அலுவலக வளாகத்தில், ஆம்புலன்ஸ் மற்றும் கல்வி சேவை வாகனம் வழங்கும் விழா நடந்தது.'நாவா' செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காரம் போஸ்லே, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து பேசுகையில்,''அரசு சார்பில், மாணவர்களை அழைத்து வர, வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, இங்கிலாந்தை சேர்ந்த கபீர் முல்ஜி மற்றும் ரோஸ்லின் முல்ஜி ஆகியோர் ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளனர். மாநில அரசும் ஆதிவாசிகள் உட்பட, அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது,'' என்றார். நாவா நிர்வாகி விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X