கால்பந்து போட்டி வென்ற அணிக்கு கேடயம்| Dinamalar

கால்பந்து போட்டி வென்ற அணிக்கு கேடயம்

Added : நவ 16, 2021
Share
குன்னுார்: குன்னுார் தாலுகா, கேத்தி கம்மந்து கிராமத்தில், இளைஞர் 'ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில் நடந்த கால்பந்து போட்டியில், 32 அணிகள் பங்கேற்றன.இறுதி போட்டியில், பிரகாசபுரம் அணி; ஊட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி, சமநிலையில் முடிவடைந்தது. தொடர்ந்து, நடந்த 'பெனால்டி கிக்' முறையில், 3--2 என்ற கோல் கணக்கில் பிரகாசபுரம் அணியினர்

குன்னுார்: குன்னுார் தாலுகா, கேத்தி கம்மந்து கிராமத்தில், இளைஞர் 'ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில் நடந்த கால்பந்து போட்டியில், 32 அணிகள் பங்கேற்றன.இறுதி போட்டியில், பிரகாசபுரம் அணி; ஊட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி, சமநிலையில் முடிவடைந்தது. தொடர்ந்து, நடந்த 'பெனால்டி கிக்' முறையில், 3--2 என்ற கோல் கணக்கில் பிரகாசபுரம் அணியினர் வெற்றி பெற்றனர்.மூன்றாம் இடத்திற்கான போட்டியில், மீக்கேரி மற்றும் கோத்தகிரி நட்டக்கல் அணியினர் இடையே நடைபெற்ற போட்டியில், 2--0 என்ற கோல் கணக்கில் மீக்கேரி அணியினர் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கான கோப்பையை தட்டி சென்றனர்.பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கம்மந்து ஊர் தலைவர் நஞ்சன் உட்பட சிலர் பங்கேற்று பரிசு கோப்பை; கேடயங்களை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X