சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை கல்லுாரி மாணவர்கள் கண்டனம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோத்தகிரி: கோவையில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்த மாணவிக்கு, நீதி வழங்க வலியுறுத்தி, கோத்தகிரி கே.பி.எஸ்., கல்லுாரி மாணவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.கோவை கோட்டைமேட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியரால், பாலியல் தொல்லைக்கு ஆளானார்.பள்ளியில் இருந்து விலகிய மாணவி, சில நாட்களுக்கு முன், அவரது வீட்டில்

கோத்தகிரி: கோவையில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்த மாணவிக்கு, நீதி வழங்க வலியுறுத்தி, கோத்தகிரி கே.பி.எஸ்., கல்லுாரி மாணவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.கோவை கோட்டைமேட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியரால், பாலியல் தொல்லைக்கு ஆளானார்.பள்ளியில் இருந்து விலகிய மாணவி, சில நாட்களுக்கு முன், அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.இந்நிலையில், கோத்தகிரி கே.பி.எஸ்., கல்லுாரி மாணவர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து,'பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு, விரைவில் நீதி வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X