ஜீப் கவிழ்ந்து விபத்து7 தொழிலாளர்கள் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீப் கவிழ்ந்து விபத்து7 தொழிலாளர்கள் காயம்

Added : நவ 16, 2021
Share
குன்னுார்: குன்னுார் கேத்தி பாலடா அருகே, கோலனி மட்டம் பகுதியில், தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.குன்னுார் பகுதி கேத்தி பாலடா அருகே கோலனிமட்டம், செலவிப்நகர் பகுதியில், பொக்லின் பயன்படுத்தி, சாலையோர தோட்டத்தில் காளான் கழிவு மூட்டைகள் எடுக்கும் பணி நடந்தது. இந்நிலையில். கனமழையால், அப்பகுதி சாலை சேறும்

குன்னுார்: குன்னுார் கேத்தி பாலடா அருகே, கோலனி மட்டம் பகுதியில், தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.குன்னுார் பகுதி கேத்தி பாலடா அருகே கோலனிமட்டம், செலவிப்நகர் பகுதியில், பொக்லின் பயன்படுத்தி, சாலையோர தோட்டத்தில் காளான் கழிவு மூட்டைகள் எடுக்கும் பணி நடந்தது. இந்நிலையில். கனமழையால், அப்பகுதி சாலை சேறும் சகதியுமாக மாறியதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டது.நேற்று காலை இந்த பகுதியில் இருந்து, டிரைவர் தயா என்பவர், ஜீப்பில், 12 பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். அதிவேகத்தில் சென்றதால் ஜீப் சேற்றில் சிக்கி, சாலையோரம் உள்ள தோட்டத்தில் காளான் கழிவுகளுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள், தொழிலாளர்களை மீட்டனர். இதில், காயமடைந்த கவிதா, 40, சரஸ்வதி 44, புஸ்பராணி 50, லதா 54, முத்து லட்சமி, 37, யசோதா 40, சாந்தி, 55 ஆகியோர் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதில், மூவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லவ்டேல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X