அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்!

Added : நவ 16, 2021
Share
Advertisement
கடலுார் லோக்சபா தொகுதிக்குஇடைத்தேர்தல் வருமா?பண்ருட்டிக்கு பக்கத்தில், முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார், கடலுார் தி.மு.க., -- எம்.பி., ரமேஷ். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் இருந்தபடியே, தொடர்ச்சியாக ஜாமின் மனுக்களை போட்டு வருகிறார். எனினும் அந்த மனுக்கள்

கடலுார் லோக்சபா தொகுதிக்குஇடைத்தேர்தல் வருமா?
பண்ருட்டிக்கு பக்கத்தில், முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார், கடலுார் தி.மு.க., -- எம்.பி., ரமேஷ். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் இருந்தபடியே, தொடர்ச்சியாக ஜாமின் மனுக்களை போட்டு வருகிறார். எனினும் அந்த மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி ஆகின்றன.

இந்நிலையில், 'கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரமேஷ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என கேட்டு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, தமிழகத்தில் இருந்து கடிதங்கள் போயிருக்கிறதாம்.சபையில், அவர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்வது தான் ஒரே வழி என்பதால், அந்தக் கடிதங்கள் மீது சபாநாயகர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.
அடுத்து நடக்கவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், ரமேஷ் மீதான கொலை வழக்கை காரணம் காட்டி, அவர் மீது உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப, எதிர்க்கட்சியினர் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறதாம்.உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டால், ரமேஷ் பதவி இழக்க நேரிடும். அதனால், கடலுார் பார்லிமென்ட் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது என்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

அன்புமணி சொன்னதைகேட்பாரா ஸ்டாலின்?

பசுமை தாயகம் அமைப்பின் சார்பில், 'நாம் விரும்பும் சென்னை' என்ற தலைப்பில், 2016ல், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, ஒரு அறிவியல்பூர்வ வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டார். சென்னை மீண்டும் ஒரு வெள்ளத்தில் சிக்கக் கூடாது என்ற அடிப்படையில், புதிய நகர்ப்புற செயல் திட்டம் அதில் இடம் பெற்றிருந்தது.நீர் வள மேலாண்மை, ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை போன்ற தலைப்புகளில் சென்னையை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பது குறித்த கட்டமைப்பு பணிகள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அந்த வழிகாட்டுதல் ஆவணத்தை கண்டுகொள்ளவில்லை. தற்போது சென்னை மிதப்பதால், முதல்வர் ஸ்டாலின், அந்த வழிகாட்டுதல் ஆவணத்தை வாங்கி படிக்க வேண்டும் என, பா.ம.க.,வினர் விரும்புகின்றனர்.அன்புமணி கொடுத்தது என்று, 'ஈகோ' பார்க்காமல், சென்னை வாழ் மக்கள் நலன் கருதி புதிய செயல் திட்டங்களை நிறைவேற்ற முன் வரவேண்டும். நீர் வளம், உள்ளாட்சி, வருவாய், பொதுப்பணி போன்ற துறைகளை ஒருங்கிணைத்து, அத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், பா.ம.க., தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. முதல்வர் முடிவு என்னவோ?

தடுப்பணை உடைந்த விவகாரம்'சஸ்பெண்ட்' அதிகாரிக்கு பதவி

தென்பெண்ணையாற்றின் குறுக்கே, விழுப்புரம் மாவட்டம் தளவானுார், கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே, அ.தி.மு.க., ஆட்சியில், 25.3 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடல் இல்லாமல் அது கட்டப்பட்ட நிலையில், ஜன., மாதம் அதன் ஒருபகுதி உடைந்தது. பணியை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று கூறி, சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்டோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தடுப்பணையின் மற்றொரு பகுதி, சமீபத்திய மழையில் சேதம் அடைந்தது. இதில் இருந்து வெளியேறிய நீரால், சுற்றுப்பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், தடுப்பணை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை பொறியாளர் அசோகன் மீதான நடவடிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தரமணியில் உள்ள நீராய்வு நிறுவன தரக் கட்டுப்பாடு பிரிவு தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இவர் தான் சான்றிதழ் வழங்க வேண்டும். அணை உடைந்த விவகாரத்தில் சிக்கிய அதிகாரிக்கு, அது தொடர்புடைய பதவி கிடைத்துள்ளது. இவர் போல, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மற்ற அதிகாரிகளும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். அதுபோல, தடுப்பணை கட்டுமானப் பணியை மேற்கொண்ட பி.எஸ்.டி., ஒப்பந்த நிறுவனம் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X