போதை பொருள் கடத்தல் எல்லையில் இருவர் கைது

Added : நவ 16, 2021
Advertisement
பந்தலுார்: கேரள எல்லையில் போதை பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகா மாநிலத்திலிருந்து, முத்தங்கா சோதனைச்சாவடி வழியாக, வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளுக்கு, போதை பொருள் கடத்தி வருவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நேற்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நைஜிஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, முத்தங்கா சோதனைச்சாவடி வழியாக

பந்தலுார்: கேரள எல்லையில் போதை பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகா மாநிலத்திலிருந்து, முத்தங்கா சோதனைச்சாவடி வழியாக, வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளுக்கு, போதை பொருள் கடத்தி வருவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
நேற்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நைஜிஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, முத்தங்கா சோதனைச்சாவடி வழியாக வந்த பைக்கை ஆய்வு செய்தபோது, போதை பொருளான 'எம்.டி.எம்.ஏ; கஞ்சா;ஆசிஸ் ஆயில்; டை ஸ்பாம்' மாத்திரைகள் கடத்தி வருவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜிஷாத் 21, ஷக்கீர் 23, ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், இத்தகைய போதை பொருட்கள், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளிலும் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக போலீசாரும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X