தமிழ்நாடு

யானை வழித்தடம் அழிப்பு: அதிகாரிகள் நேரடி ஆய்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
குன்னுார்: குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில், யானை வழித்தடம் அழிக்கப்பட்ட இடத்தை வனத்துறையினர்; நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையோர பகுதிகளில் வனத்துறையின் சார்பில்,'யானை வழித்தடம்' என்ற அறிவிப்பு வைத்துள்ள, கே.எம்.எஸ்., அருகே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் வரிவாக்க பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், யானைகள் வழி மாறி
 யானை வழித்தடம் அழிப்பு: அதிகாரிகள் நேரடி ஆய்வு

குன்னுார்: குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில், யானை வழித்தடம் அழிக்கப்பட்ட இடத்தை வனத்துறையினர்; நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையோர பகுதிகளில் வனத்துறையின் சார்பில்,'யானை வழித்தடம்' என்ற அறிவிப்பு வைத்துள்ள, கே.எம்.எஸ்., அருகே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் வரிவாக்க பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், யானைகள் வழி மாறி கிராமங்களுக்கு சென்று, மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி (பொ), நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் செல்வம், குன்னுார் ரேஞ்சர் சசிகுமார் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், சர்வே செய்யப்பட்டது. இதில், 4 மீட்டர் முதல், 8 மீட்டர் வரையில் யானைகள் செல்ல, வழிவிட வலியுறுத்தப்பட்டது. இதற்கு நெடுஞ்சாலைதுறையினர் ஒப்பு கொண்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'வனவிலங்கு நடமாட்ட பகுதிகளில் விரிவாக்க பணி மேற்கொள்ள கூடாது, என்ற விதிமுறையை, நெடுஞ்சாலை துறையினர் பின்பற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X