ஜாமினில் விடுவிக்கப்பட்டவரை கண்காணிக்க 'கூகுள் மேப்' உதவி

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஜே.இ.இ., முதன்மை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு, 'ஜாமின்' வழங்குகையில், குற்றவாளியை கண்காணிக்க, 'கூகுள் மேப்' செயலியை பயன்படுத்தும்படி போலீசாருக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படும் இந்த

புதுடில்லி:ஜே.இ.இ., முதன்மை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு, 'ஜாமின்' வழங்குகையில், குற்றவாளியை கண்காணிக்க, 'கூகுள் மேப்' செயலியை பயன்படுத்தும்படி போலீசாருக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படும் இந்த தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொண்டு தொழில்நுட்ப ரீதியிலான மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்நிறுவனத்தின் இரு இயக்குனர்கள், நான்கு ஊழியர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.அந்நிறுவன ஊழியர் அஜின்கியா நர்ஹாரி பாட்டீல் என்பவர், ஜாமின் கோரி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் தன், 'மொபைல் போன்' எண்ணை விசாரணை அதிகாரியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்த மொபைல் போனில், சம்பந்தப் பட்டவரின் இருப்பிடத்தை அறியும், 'கூகுள் மேப்' செயலியை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதன் வாயிலாக, ஜாமினில் வெளியே இருப்பவர் எங்கெங்கு செல்கிறார் என்பதை போலீசார் கண்காணிக்க முடியும். ஜாமின் உத்தரவில் இதுவரை இல்லாத நுாதனமான உத்தரவை முதல்முறையாக சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X