அமேசானில் கஞ்சா இரண்டு பேர் கைது

Added : நவ 16, 2021
Advertisement
இந்துார்:மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அமேசான் வாயிலாக கஞ்சா அனுப்பப்பட்டது. பிந்த் மாவட்ட போலீசார், 20 கிலோ கஞ்சா அடங்கிய பார்சலை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்துார்:மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அமேசான் வாயிலாக கஞ்சா அனுப்பப்பட்டது. பிந்த் மாவட்ட போலீசார், 20 கிலோ கஞ்சா அடங்கிய பார்சலை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 1கோடியே 10 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

இந்த கடத்தல் வியாபாரத்தில் அமேசான் நிறுவனத்துக்கு 66 சதவீத கமிஷன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X