பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் துவங்கியது மண்டல காலம்: 41 நாட்கள் தொடர்ந்து பூஜை

Added : நவ 16, 2021
Share
Advertisement
சபரிமலை:சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் துவங்கி உள்ளன. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் ஆகும்.தமிழகத்தில் இன்று தான் கார்த்திகை ஒன்று. ஆனால் கேரளாவில் நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் அதிகாலை 4:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன்
 சபரிமலையில் துவங்கியது மண்டல காலம்: 41 நாட்கள் தொடர்ந்து பூஜை

சபரிமலை:சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் துவங்கி உள்ளன. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் ஆகும்.தமிழகத்தில் இன்று தான் கார்த்திகை ஒன்று. ஆனால் கேரளாவில் நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் அதிகாலை 4:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.

தொடர்ந்து தந்திரி கண்டரரு மோகனரரு அய்யப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி நெய்யபிஷேகத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து கணபதி ஹோமமும் வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து 40 தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 படிபூஜை உண்டு. டிச., 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது.

ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களிடம் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை சரிபார்த்த பின் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.


பம்பையில் குளிக்க அனுமதி

அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன்,மதுரையில் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் ஆவணங்களை சரிபார்க்க, நிலக்கலில் 10 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கேயும் முன்பதிவு செய்யும் வசதி உண்டு. பம்பை ஆற்றில் குளிக்க அனுமதிக்கப்படுவர்.
சன்னிதானத்தில் இரவு தங்க அனுமதியில்லை. அபிஷேக நெய்யை அதற்கான கவுன்டரில் கொடுத்து டோக்கன் பெற வேண்டும். பின், அதை காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக் கொள்ளலாம்.அய்யப்ப சேவா சங்கம் சார்பில், மூன்று வேளை அன்னதானம் வழங்கி வருகிறோம். பக்தர்களுக்கு உடல்நலம் பாதித்தாலோ, இறந்தாலோ எங்கள் செலவில், அவர்களது சொந்த ஊருக்கே கொண்டு செல்ல தேவசம் போர்டு, மாவட்ட மருத்துவ அதிகாரி அனுமதி பெற்றுள்ளோம்.
சபரிமலையில் துப்பரவு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். அனைத்து சேவைகளையும் 1,000 தொண்டர்கள் சுழற்சி முறையில் செய்ய உள்ளனர். நிலக்கலில் சுந்தரம் ஆட்டோ மொபைல்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் சார்பில், இலவச வாகன பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பக்தர்களுக்கு உதவ, அய்யப்ப சேவா சங்கத்தினர் தயாராக உள்ளனர். சன்னிதானம் 04735 - 202 043; பம்பை 04735 - 203 407 என்ற எண்களை அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X