அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடமை தவறிய தி.மு.க., அரசு: பழனிசாமி

Updated : நவ 18, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கடலுார் : ''மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து, தி.மு.க., அரசு தவறி விட்டது,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார். கடலுார் மாவட்டத்தில், மழையால் பாதித்த பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். மளிகை பொருட்கள் புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தில் கரடு
கடமை,தி.மு.க., அரசு,  பழனிசாமி

கடலுார் : ''மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து, தி.மு.க., அரசு தவறி விட்டது,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கடலுார் மாவட்டத்தில், மழையால் பாதித்த பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.


மழை பாதிப்பு ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக ஆய்வு

மளிகை பொருட்கள்


புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தில் கரடு முரடான பாதையில், காரில் செல்ல முடியாத நிலை இருந்தது.இதையடுத்து, ஜீப் வாயிலாக சென்று, விவசாய பயிர்கள் பாதிக்க காரணமான பரவனாற்று கரை பகுதியை பார்வையிட்டனர். அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, சிதம்பரம் மற்றும் புவனகிரியில் மழையால் பாதித்த பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு துணி, பாய், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். பின், பழனிசாமி கூறுகையில், ''மழை பாதிப்பு பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. அரசின் அலட்சியத்தால், தமிழகம் முழுதும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசு நிவாரணம் வழங்கவில்லை.


அரசு நடவடிக்கை



''கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், மழை, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கினோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புகளை இருவரும் பார்வையிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17-நவ-202121:38:05 IST Report Abuse
Anantharaman Srinivasan ஜெ..பின்னும் ஆட்சியில் இருந்தவரை கல்லா கட்டுவதிலேயே குறியாய் இருந்தவர்களின் ஒப்பாரி..
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
17-நவ-202118:32:04 IST Report Abuse
T.sthivinayagam கடந்த ஏழு ஆண்டுகளாக கடமையை தவறவிட்ட அதிமுக அதன் கூட்டணி கட்சியான பாஜாக.
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
17-நவ-202118:19:44 IST Report Abuse
Gopal கஜா, ஒக்கி புயல் வந்தபோது வீட்டை விட்டு வெளியில் வராதவங்க என்னமா போலி வேஷம் போடுறாங்க. பச்சை துண்டை போட்டுகொண்டு நானும் விவசாயின்னு சுத்தி வந்து வெட்டி நடைபோட்டு மக்களை ஏமாத்த நினைச்ச அடிப்பொடி கொள்ளைக்கூட்டத்தை மக்கள் அடித்து விரட்டியும் புத்தி வராமல் சுத்திவறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X