உத்தவ் தாக்கரே பகுதி நேர முதல்வர்: பா.ஜ., தாக்கு!

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: 'உத்தவ் தாக்கரே ஒரு பகுதி நேர முதல்வர், மஹாராஷ்டிராவுக்கு பட்னவிஸ் போன்ற முழு நேர முதல்வர் தான் தேவை' என அம்மாநில பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.மஹாராஷ்டிராவில் 2019 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது சிவசேனா. 288 தொகுதிகளில் பா.ஜ.க., அதிகபட்சமாக 105 இடங்களை பெற்றது. சிவசேனா 56 இடங்களை பெற்றது. இருப்பினும் முதல்வர் பதவிக்காக

மும்பை: 'உத்தவ் தாக்கரே ஒரு பகுதி நேர முதல்வர், மஹாராஷ்டிராவுக்கு பட்னவிஸ் போன்ற முழு நேர முதல்வர் தான் தேவை' என அம்மாநில பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.



latest tamil news



மஹாராஷ்டிராவில் 2019 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது சிவசேனா. 288 தொகுதிகளில் பா.ஜ.க., அதிகபட்சமாக 105 இடங்களை பெற்றது. சிவசேனா 56 இடங்களை பெற்றது. இருப்பினும் முதல்வர் பதவிக்காக பா.ஜ.,விலிருந்து விலகியது. பின்னர் 44 இடங்கள் வைத்திருந்த காங்கிரஸ் மற்றும் 54 இடங்கள் பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

இந்நிலையில் இன்று பா.ஜ., மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


latest tamil news



அதில் பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது: உத்தவ் தாக்கரே மஹா.,வின் பகுதி நேர முதல்வர். மாநிலத்திற்கு தேவேந்திர பட்னவிஸ் போன்ற முழு நேர முதல்வர் தேவை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து சிவசேனா பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல இம்மாநில மக்களுக்கும் துரோகம் செய்தது. நான் இந்த அரசுக்கு சவால் விடுகிறேன். சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள். அப்போது தெரியும் எந்த கட்சி பெரும்பான்மை பெரும் என்பது. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202108:59:43 IST Report Abuse
சம்பத் குமார் 1). உத்தர தாக்கரே ஒரு பல் பிடுங்கப்பட்ட ஒரு பாம்பு . இங்கு பாம்பாட்டி ஆக திரு சரத்பவார் அவர்கள் உள்ளார். 2). அர்பணுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்.. இது இந்தியாவில் சில குறிப்பிட்ட Anti Indians அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். 3). மஹாராஷ்டிரவின் சாபக்கேடு திரு சரத்பவார் அவர்கள். 4). மஹாராஷ்டிரா முழுவதும் அவருக்கு செல்வாக்கு கிடையாது. 5).ஆனால் குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட சமுதாயத்தில் செல்வாக்கு உள்ளது. 6). காங்கிரஸில் அமைச்சர் மற்றும் மஹாராஷ்டிராவில் சம்பந்தமில்லாத வகையில் நிறைய சொத்து சேர்த்து வைத்துள்ளார். 7). நிறைய துர் எண்ணங்கள் கொண்ட நண்பர்கள் மற்றும் Anti Indians சகவாசம் அவரை மஹாராஷ்டிராவின் நிழல் உலக ஹீரோ ஆக ஆக்கியுள்ளது. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202123:14:36 IST Report Abuse
Kasimani Baskaran முதலில் இந்த ஆள் முதல்வரே கிடையாது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத பாஜக... மானம் போகிறது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-நவ-202123:10:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெட்டியாக ஊர் சுற்றும் பிரதமரை பற்றி நாம மறந்துட்டோம்.. பார்லிமெண்டுக்கு எம்புட்டு தடவை வந்தாருன்னு சொல்ல சொல்லுங்க ..
Rate this:
பேசும் தமிழன்நீங்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து முழித்து கொள்ளவில்லை என்று நினைகிறேன்.... ஒன்றுக்கும் உதவாத மக்கு சிங் ஆட்சி போய்... ரொம்ப நாள் ஆகி விட்டது... இப்போது இருப்பது நாட்டை நேசிக்கும் பிரதமர் ஆட்சி... முன்பு இருந்தது வடக்கே மற்றும் தெற்கே குடும்பத்துக்கான ஆட்சி... இப்போது நடப்பது மக்களுக்கான மோடி அவர்களின் ஆட்சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X