செய்தி செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி செல்லும் தடுப்பூசி

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி செலுத்தியவர் குறித்து விசாரிக்க, களப்பணியாற்ற மாவட்டத்தில், 246 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதுவரை திருப்பூர் மாவட்டத்தில், 16 லட்சத்து, 97 ஆயிரத்து, 071 பேர் முதல் தவணை தடுப்பூசியும், ஆறு லட்சத்து, 93 ஆயிரத்து, 359 பேர் இரண்டாம் தவணை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
ஒவ்வொரு வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி செலுத்தியவர் குறித்து விசாரிக்க, களப்பணியாற்ற மாவட்டத்தில், 246 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதுவரை திருப்பூர் மாவட்டத்தில், 16 லட்சத்து, 97 ஆயிரத்து, 071 பேர் முதல் தவணை தடுப்பூசியும், ஆறு லட்சத்து, 93 ஆயிரத்து, 359 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.முதல் தவணை செலுத்தி, இரண்டாம் தவணைக்கான காலக்கெடு வந்த பின்னரும், பலர் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் அலட்சியமாக உள்ளனர்.சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 வட்டாரங்களில், 246 கிராம சுகாதார செவிலியர் உள்ளனர். ஒவ்வொரு வட்டாரத்திலும், கிராம சுகாதார செவிலியர் தலைமையில் பிரத்யேக குழு அமைக்கப்படும். குழுவில் ஐந்து முதல் எட்டு ஊழியர்கள் இடம் பெறுவர்.இவர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர் இருப்பின், உடனே செலுத்துவர். முதியவர், இணை நோய் இருப்பவர்களுக்கு அவர்களின் உடல் நலத்துக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X